பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..

by Staff / 16-01-2023 11:29:33am
பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் நாளான இன்று பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பேரணி செல்லவுள்ளார். இதையடுத்து டெல்லி நகர சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 350 பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடி இந்த நிகழ்வில் இரண்டு நாட்களும் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள 9 மாநில சட்டபேரவை தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.

 

Tags :

Share via