ஹாக்கிபட்டி என்ற கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்-

by Admin / 18-05-2023 10:06:52pm
ஹாக்கிபட்டி என்ற கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்-

ஹாக்கிபட்டி என்ற கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்- முதல் போட்டியில் டெல்லி வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் இன்று முதல்  தொடங்கியுள்ளது. வரும் 28ம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது.

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் இன்று முதல்  தொடங்கியுள்ளது.11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று தொடங்கிய முதல் போட்டியை கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர்

கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவின் முதல் போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் ராமசாமி துவக்கி வைத்தார். 

இன்று தொடங்கிய முதல் போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின.இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது. 

11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

முதல் லீக் போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின.

7-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் பிரவிந்தர் சிங் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.   

21-வது நிமிடத்தில் மும்பை யூனியன் பேங்க் அணி வீரர் வினோத் ஷைனி பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார்.   

29-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் ராயூஷன் குமார் ஒரு பீல்டு கோல் போட்டார்.   

59-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் சந்தன் சிங் பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார். 

 இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது. 

ஹசன் அலி மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் ரகு,முனைவர் ராம்குமார் மற்றும் முனைவர் சிவராஜ், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்

.கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

ஹாக்கிபட்டி என்ற கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்-
 

Tags :

Share via