மத்திய அமைச்சரவை மாற்றம்.. பிரதமர் அதிரடி

by Staff / 18-05-2023 05:16:01pm
மத்திய அமைச்சரவை மாற்றம்.. பிரதமர் அதிரடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மத்திய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல், சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via