பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்

by Editor / 24-07-2021 04:54:26pm
பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்  (மே 15, 1967 அன்று பிறந்த மாதுரி ஷங்கர் தீட்சித்)பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார்.இவர் பல வகையான வணிகரீதியான வெற்றிப்படங்களில் தோன்றியதோடு பல படங்களில் அவருடைய நடிப்புத் திறமைக்காகவும் எண்ணற்ற மனம் கவரும் நடனங்களுக்காகவும் பெயர் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிகவும் உயர்ந்த குடிமுறைசார்ந்த விருதான பத்ம ஸ்ரீ பட்டத்தை அளித்து பெருமை செய்திருக்கிறது.


மாதுரி தீட்சித் மும்பையை சார்ந்தவர். மராத்தி சித்பவன் பிராம்மண குடும்பத்தைச் சார்ந்த ஷங்கர் மற்றும் ஸ்நேஹலதா தீட்சித்திற்கு பிறந்த இவர் டிவைன் சைல்ட் உயர்நிலைப்பள்ளியிலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்தார். மேலும் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனர் ஆக விரும்பினார். இவர் பலமுறை மேடைகளில் நடனமாடி பெயர்பெற்ற கதக் நடனக் கலைஞராவார், இவர் கதக் நடனத்தில் எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.


மாதுரி தீட்சித் முதல்முறையாக அபோத் (1984) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் சில சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு, தேஜாப் (1988) என்ற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இப்படம் இவரை ஒரு திரைநட்சத்திரமாக வானளாவுக்கு உயர்த்தியது, மேலும் இவர் இப்படத்தில் நடித்ததற்கான முதல் பிலிம்பேருக்கான பரிந்துரையும்பெற்றார். இவர் அதற்குப்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்தார், அவற்றில் ராம் லகன் (1989), பரிந்தா (1989), த்ரிதேவ் (1989) மற்றும் கிஷன் கன்ஹையா (1990) போன்ற படங்கள் அடங்கும். 


1990 ஆம் ஆண்டில், மாதுரி இந்திர குமாரின்காதல்-நாடகமான தில் என்ற திரைப்படத்தில் ஆமிர் கானுடன் நடித்தார்.தில் படத்தைத் தொடர்ந்து அவர் வரிசையாக மேலும் பல வெற்றிப்படங்களை அளித்தார், அவற்றில் சாஜன் (1991), பேட்டா (1992), கல்நாயக் (1993), ஹம் ஆப்கே ஹைன் கௌன் ! (1994) மற்றும் ராஜா (1995) போன்றவை அடங்கும்.ஹம் ஆப்கே ஹைன் கௌன்  என்ற படம் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இதுவரை பெற்றிராத அளவுக்கு வசூலைப் பெற்றுத்தந்தது., 1997 ஆம் ஆண்டில் யாஷ் சோப்ராவின் படமான தில் தோ பாகல் ஹை (1997) யில் தோன்றினார். 2002 ஆம் ஆண்டில் இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ் படத்தில் ஷா ருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார்.

 

Tags :

Share via