தேனியில் "கோட்" திரைப்படம் கண்டுகளித்த விஜயகாந்த் மகன்கள்
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்துள்ளது போன்ற காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விஜயகாந்தின் புகைப்படத்தின் வழி அவருடைய தோற்றத்தை எட்டு விதமான வடிவங்களில் உருவாக்கி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக G.O.A.T.திரைப்படத்தை காண அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், மற்றும் திரைப்பட நடிகர் சரத்குமார், திரைப்பட இயக்குனர் பொன்ராம் ஆகியோர் தேனி வெற்றி திரையரங்கம் வந்து, திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
Tags : தேனியில் "கோட்" திரைப்படம் கண்டுகளித்த விஜயகாந்த் மகன்கள்