காவல்நிலையம் அருகே தாய், மகள் தற்கொலை!. போலிசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய் கற்பகம் (42), மகள் சுபிக்ஷா (16) ஆகிய இருவரும் வீட்டில் பேனிலும், கொக்கியிலும் ஆளுக்கு ஒரு இடம் பிடித்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் இரு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
Tags : ஜோலார்பேட்டை காவல்நிலையம் அருகே தாய், மகள் தற்கொலை