போலீசாரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

சென்னை: பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர் ஆறுமுகம் போக்குவரத்து பணியில் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆறுமுகத்தின் காலில் ஏறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கி பூட்ஸ் காலால் உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அயப்பாக்கத்தை சேர்ந்த ஆர்த்திஸ் (28) என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Tags :