தலைவரே தாக்குதலை தூண்டும் விதத்தில் செயல்பட்டது போல தெரிகிறது- திருமா மீது நீதிபதி அதிருப்தி.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி போலீசாரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். அந்த சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவரே தாக்குதலை தூண்டும் விதத்தில் செயல்பட்டது போல தெரிகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தின் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Tags : தலைவரே தாக்குதலை தூண்டும் விதத்தில் செயல்பட்டது போல தெரிகிறது- திருமா மீது நீதிபதி அதிருப்தி.