தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் 24 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குப் பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததாலும், அலுவலகங்கள் எங்கும் அடையாளம் காணப்படாததாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Tags :