மதுரை அரசு விழாவில் ரூபாய் 300 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின்வழங்கினார். 

by Editor / 09-09-2024 07:04:30pm
மதுரை அரசு விழாவில் ரூபாய் 300 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின்வழங்கினார். 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மாநில அளவில் 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3லட்சத்து, 74ஆயிரத்து, 277 மகளிர்க்கு ரூ.2ஆயிரத்து874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கும் பணி தொடக்க விழா மதுரையில் நடைபெற்றது.  விழாவுக்கு மதுரை கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மூர்த்தி பி டி ஆர் பழனிவேல் ராஜன், மதுரை எம்பி வெங்கடேசன் எம் எல் ஏக்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் மேயர் இந்திராணி பொன் வசந்த், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மதுரை மாவட்ட வருவாய்த் துறை மூலம் 12ஆயிரத்து,233 பயனாளிகளுக்கு ரூபாய் 75 கோடியே 60 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 101 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 25,000 மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 300 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மதுரை மாவட்டச் செயலாளர் மூர்த்தி சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள்,கடனுதவிகள் வழங்கும் விழாக்கள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

 

Tags : மதுரை அரசு விழாவில் ரூபாய் 300 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின்வழங்கினார். 

Share via