தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி.

by Editor / 09-09-2024 08:32:36pm
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத  தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி.

Share via

More stories