சென்னையில் மின்தடை - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

by Staff / 04-12-2023 12:18:06pm
சென்னையில் மின்தடை - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மழை பொழிவு குறைந்ததும் மின் விநியோகம் விரைந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories