புதிய கல்குவாரி தடை செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

by Staff / 03-03-2025 04:50:33pm
புதிய கல்குவாரி தடை செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் கல்நடைகளை அதிக அளவில் வளர்த்து  வருவதாகவும். இந்த பகுதியில் தற்போது புதிதாக கல்குவாரி அமைவதால் கல்நடைகள் வளர்க்க முடியாத நிலை ஏற்படும் எனக்கூறி இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் பழனிசங்கர் தலைமையில் 100 - க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கு வந்த அப்போது  காவல்துறையினர் அனைவரையும் உள்ள அனுமதிக்க முடியாது குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறினார்கள் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனை  அடுத்து ஐந்து நபர்களை மட்டுமே அனுமதித்தனர்.

 

Tags :

Share via