மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது - சசிகலா

by Staff / 03-06-2023 12:33:42pm
மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது - சசிகலா

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த கோர விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories