மதுரை எம்.பி சு. வெங்கடேசனின் தந்தை மறைவு-கனிமொழி கருணாநிதி எம்.பி.ஆறுதல்.

by Editor / 29-03-2025 09:49:32pm
மதுரை எம்.பி சு. வெங்கடேசனின் தந்தை மறைவு-கனிமொழி கருணாநிதி எம்.பி.ஆறுதல்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) நேற்று அதிகாலை காலமானார். இந்நிலையில், இன்று (29/03/2025) மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள எம்.பி. சு.வெங்கடேசனின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று மறைத்த இரா.சுப்புராம் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், மதுரை வடக்கு மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : மதுரை எம்.பி சு. வெங்கடேசனின் தந்தை மறைவு-கனிமொழி கருணாநிதி எம்.பி.ஆறுதல்.

Share via