திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை

by Admin / 05-12-2025 09:25:02pm
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை இப்பொழுது மதரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சனையாக கிளர்ந்து எழுந்துள்ளது. பாரம்பரியமாக கார்த்திகை தீபம் மலையின் உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் ஏற்றப்பட்டு வந்தது மலையின் ஒரு பகுதியில் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவ்லியா தர்கா அமைந்துள்ளது இந்த பகுதி இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தர்கா நிர்வாகம் கூறுகிறது. இந்து அமைப்புகள் குறிப்பாக இந்து முன்னணி பாரதிய ஜனதா கட்சியினர் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன இந்த தீபத்தூண் தர்கா பகுதியில் இருந்து சுமார் 15 முதல் 50 மீட்டர் தொலைவில் ஆக்கிரமிக்கப்படாத கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவின் பேரில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீபத்தூரில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார் தீபம் ஏற்றுவது தற்காவின் உரிமைகளை பாதிக்காது என்றும் கோவிலின் சொத்துரிமையை பாதுகாக்க இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தன நீதிமன்ற உத்தரவு பொடி தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதை அடுத்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தமிழக அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக முதலமைச்சர் மதுரைக்கு தேவை மெட்ரோ ரயில் திட்டமா .. எய்ம்ஸ் மருத்துவமனையா...வளர்ச்சி பணியா எது வேண்டுமென்று மதுரை மக்களை தீர்மானிக்கட்டும் என்று இந்த பிரச்சனையை பெரிது படுத்தாமல் மக்களின் வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய நிலையில் ,பாரதிய ஜனதா முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்ததோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிபதி செய்தது தவறு என்றும் அவரை பணிநீக்கம் செய்யவேண்டுமென்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சி, ஐ.எஸ், எப் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னைஉயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.

 

Tags :

Share via