டி 20: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு

by Editor / 23-10-2021 04:32:23pm
டி 20: இந்தியாவுக்கு எதிரான  பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு


இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்து, சென்னை அணி கோப்பையை தட்டி சென்ற நிலையில், உலகக்கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், 24-ல் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சசை நடக்கிறது.


இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஏற்கனவே இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுவிட்டது. டி 20 உலககோப்பை போட்டியில், நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.


இதன்படி, பாகிஸ்தான் அணியின் சார்பில் பாபர், ரிஷிவான், பகார், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷஹீன், ஹாரிஸ், ஹைதர் ஆகியோர் விளையடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 24 இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via