இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை இறுதி செய்து நேற்று பட்டியல்களை வெளியிட்டன.
இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அட்டவணையின் படி,
வேட்பு மனு தாக்கல் இன்று திங்கட்கிழமை மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் தேதி திங்கட்கிழமை.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஏப்ரல் 9ஆம் தேதி வியாழக்கிழமை
. வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவு மே நாலாம் தேதி திங்கட்கிழமை வெளியாகிறது.
வேட்பு மனுக்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
இன்று முதல் ஏப்ரல் ஆறு வரை மனுதாக்கல் செய்யலாம் என்றாலும் இடையில் வரும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது எனவே நான்கு நாட்கள் மட்டுமே மார்ச் 30 ஏப்ரல் 2, 4 ,6 ஆகிய தேவைகளில் மட்டுமே மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு உள்ளது.
மனு தாக்கல் செய்யும்பொழுது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவுக்கு மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் வேட்பாளர் உள்பட ஐந்து பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















