மகளை மொட்டை மாடியில் இருந்து தள்ளிய தந்தை

ஆந்திரப்பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் யட்லபாடு மண்டலத்தில் உள்ள உன்னாவா கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி. இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது தந்தை திட்டியுள்ளார். மீண்டும் அவர் மொட்டை மாடியில் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தந்தை பார்த்துள்ளார். தனது மகளிடம் யாரோ பேசுகிறார்களோ என சந்தேகமடைந்த அவர், மகளின் கழுத்தைப்பிடித்து கீழே தள்ளினார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்தனர்.
Tags :