திருக்கூடலூர் திவ்ய தேசம்

by Admin / 24-01-2023 12:35:28pm
திருக்கூடலூர் திவ்ய தேசம்

பெருமாள் குடிகொண்டிருக்கும் புனித ஸ்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைப்பர்.அப்புனித ஸ்தலம் 108.அந்த 108 திருக்கோவில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்தலம்தான் கும்பகோணம் ஆடுதுறையிலுள்ள திருக்கூடலூரும்ஒன்றாகும்.வட திருக்கூடலூர் என்றும் சங்கம சேத்திரம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் பெருமாள் வராக  அவதாரம் எடுப்பதற்கு  முன்பே தோன்றியதாக கூறுவர்.இரண்யாட்சகன்  என்ற அரக்கன் பூமாதேவியை ஏழு கடல்களுக்கும் கீழேபாதாளத்தில் கொண்டுபோய் வைத்தனர்.சிவன் உள்பட அனைத்து தேவர்களும் பெருமாளிடம் சென்று முறையிட,பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஆடு துறையில்   மண்ணை த்தோண்டி உள்சென்று  பூமாதேவியுடனய ஸ்ரீமுஷ்ணத்தில் வெளிவந்ததாக புராணங்கள் சொல்கின்றன .பூமாதேவியாகி  வையகத்தை மீட்டதால்  இக்கோவிலுக்கு வையம் காத்த பெருமாள் கோவில்  என்ற  பெயராலும் அழைக்கபபடுவதுண்டுஇத்தலத்தைப்பற்றி பிரமாண்ட புராணமும் பத்மபுராணமும்  புகல்கின்றன.முன்னொரு காலத்தில் அம்பரீசன் என்னும்
மன்னன் ஆட்சி புரிந்த காலம்.அவன் பெருமாள் மீது அதிதீ பக்தி கொண்டிருந்தான்.சதாசர்வகாலமும் வேங்கடநாதனையே நினைத்தும் அவன் நாமத்தை உச்சரித்தும் கடும்விரதமும் தவம் புரிவதிலும் அக்கறை கொண்டிருந்தான்.இவனின் தீராக்காதலால் பெருமாள் நேரில் தோன்றி தம் உருவக்காட்சியை நல்க..அம்பரீசன் அளவற்ற ஆனந்தம் கொண்டான்.எம்பெருமான் அவனிடன் உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்க...அதற்கு அம்பரீசனோ,இப்பொழுது உங்களை வழிபட்டு வாழும் வாழ்க்கையே வேண்டுமென்று கேட்க ...காக்கும் கடவுள் அதையேஅருளினார்.ஒரு காலத்தில் ,அம்பரீசன் ஏகாதேசி விரதம் இருக்கும்பொழுது துர்வாச முனிவர் இவரைக்காண வந்தார்.அவர் வந்தததை கவனியாது ஆழ்ந்த பக்தியில் மூழ்கிருந்தவனை.தன்னை அம்பரீசன் மதிக்கவில்லை என்று கருதிய துர்வாசர் அவனுக்கு சாபமிட முனைய..இதையறிந்த அம்பரீசன் பெருமாளை வேண்டி தன்னை காக்குமாறு வேண்ட.  பெருமாள் தன்சக்ராயுதத்தை துர்வாசர் மீது ஏவ ..துர்வாசர் தம் ஆணவம்,சினம் அடக்கி..சக்ரையுதத்தை சக்தி அற்றன் என்று பெருமாளை இறஞ்சி வேண்டிட...சக்ராயுதத்தை பெருமாள் திரும்ப பெற்றார்.தம் பக்தனைக்காத்தார்.அம்பரீசன் பெருமாளுக்கு இத்தலத்தில் கோவில் எழுப்பி வழிபட்டான்.அதனால் பெருமாளுக்கு அம்பரீச வரதர் எனும் பெயர் ஏற்பட்டது

திருக்கூடலூர் திவ்ய தேசம்
 

Tags :

Share via