தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து காரை அடித்து துவம்சம் செய்யும் காட்டு யானை

by Editor / 26-06-2022 02:04:04pm
தேசிய  நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து காரை அடித்து துவம்சம் செய்யும் காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற காட்டு யானைகள் காரை துவம்சம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆசனூர் அருகே வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த  படி சென்றதால் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். திடீரென காட்டு யானைகள் துரத்த தொடங்கியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை திரும்ப முயற்சித்தனர். அப்போது ஒரு வெள்ளை நிற காரை கண்டு ஆத்திரமடைந்த காட்டுயானைகள் திடீரென அந்த காரை தும்பிக்கையால் தாக்க தொடங்கியது காரில் இருந்த பயணி இறங்கி  தப்பித்து ஓடினார்

 

Tags :

Share via
Logo