என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது

by Staff / 03-02-2025 12:51:38pm
என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளர். அவரது வீட்டில் சுமார் 5 மணி நேரம் சோதனையிட்ட என்ஐஏ அதிகாரிகள்,
பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via