தமிழக முதலமைச்சர் தலைமையில் அண்ணா நினைவு பேரணி

by Admin / 03-02-2025 12:32:58pm
தமிழக முதலமைச்சர் தலைமையில் அண்ணா நினைவு பேரணி

 

தமிழக முதலமைச்சா் மு. க .ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவு தினமான பிப்ரவரி மூன்றாம் தேதியாகி இன்று. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் திமுக கழகத்தினர் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்திலும் கலைஞர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. இது குறித்து தமிழக முதலமைச்சர் தம் எக்ஸ் வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.” தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!

 

தமிழக முதலமைச்சர் தலைமையில் அண்ணா நினைவு பேரணி
 

Tags :

Share via