அமைச்சர் அன்பில் மகேசுக்கு கொலை மிரட்டல்: முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது

by Editor / 17-10-2021 04:06:34pm
அமைச்சர் அன்பில் மகேசுக்கு கொலை மிரட்டல்: முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த திருவெறும்பூர் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதைத் தொடர்ந்து நவல்பட்டு விஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் நவல்பட்டு விஜி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அச்சுறுத்தும் விதமாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு விஜி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கட்சியிலிருந்து நீக்கம்

இந்த வழக்கில் நவல்பட்டு விஜி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோரிக்கை மனு அளித்தார். இந்த வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மீதான மனு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று (சனிக்கிழமை) நவல்பட்டு விஜியைக் காவல்துறையினர் திடீரென்று கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நவல்பட்டு விஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அமைச்சர் குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில், திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த நவல்பட்டு விஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் போது அமைச்சரை அன்பில் மகேசுக்கு எதிராக வீடு விடாக துண்டறிக்கை கொடுப்பேன் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கொலை மிரட்டல் புகாரில் விஜி கைதாகி உள்ளார்.

Tags :

Share via