தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி

by Staff / 18-04-2023 02:27:57pm
 தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்த்துறை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் சுஜின். கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவர் குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர்ஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஷகிப் சேண்டினோ(3)என்ற மகனும், ஷியோனா என்ற 11 மாத குழந்தையும் உண்டு. நேற்று முன்தினம் வர்ஷா குழந்தையுடன் வாணியக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை 6. 30 மணியளவில்  வர்ஷா தாய் வீட்டின் வடக்கு பக்கத்தில் உள்ள அனிதா வீட்டிற்கு குழந்தை ஷகிப் சேண்டினோ விளையாட சென்றது. வெகு நேரமாகியும் குழந்தையை காணாததால் வர்ஷா குடும்பத்தினர் பீதியடைந்தனர். வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் தேடியும் குழந்தை குறித்து தகவல் கிடைக்கவில்லை. பின்னர் குழந்தை விளையாட சென்ற வீட்டின் கார் போர்டிகோவில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்க்கும்போது ஷகிப் சேண்டினோ இறந்த நிலையில் கிடந்தது. உடனே இது குறித்து சுஜின் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories