வளர்ந்த நிறுவனங்களில் வரிசையாக வெளியேற்றப்படும் ஊழியர்கள்.
மாபெரும் நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்டவை ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இதை தொடர்ந்து ஐபிஎம் நிறுவனமும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்லது. அந்நிறுவனம் மொத்தம் 3900 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது. ஆண்டு வருமான இலக்கு வீழ்ச்சியை சந்தித்து வருவதால் இந்த பணி நீக்கம் நடைபெறுவதாக ஐபிஎம் கூறியுள்ளது. மேலும் இந்த 3900 ஊழியர்களும் மொத்த ஊழியர்களில் வெறும் 1.5%தான் என தெரிவித்துள்ளது.
Tags :