தமிழக ஆளுநரை அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்தித்தனர்.

by Editor / 31-12-2021 09:59:40pm
தமிழக ஆளுநரை  அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்  சந்தித்தனர்.

தமிழகத்தில் வரும் 5ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவை கூடுகின்ற நிலையில்,அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட வல்லுநர் குழு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 

 

Tags :

Share via

More stories