15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் கைதான நபர் மீண்டும் கைது.

வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் கைதாகி, 2023ஆம் ஆண்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டிக்காராம் என்பவர் சென்னையில் நகை திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்தவர் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், குரோம்பேட்டையில் கடந்த 6ஆம் தேதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 சவரன் நகையை திருடிய வழக்கில் தற்போது கைதாகியுள்ளார்
Tags : 15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் கைதான நபர் மீண்டும் கைது.