தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

அடுத்த 62 வாரங்களுக்கு தாங்கள் தான் எதிர்க்கட்சி என தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026-ல் ஆளுங்கட்சியாக இருப்போம்" என கூறியுள்ளார்.
Tags :