கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்

by Staff / 09-12-2023 12:18:43pm
கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல்

சென்னை ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசி கைதான, ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் ஆயுதப்படை காவலர் சில்வானை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் ஆளுநர் மாளிகை பகுதியிலும் இன்று தடயவியல் சோதனை நடத்தினர்.

 

Tags :

Share via

More stories