அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் ஆளுநர் தமிழிசை

by Staff / 18-01-2023 11:59:10am
அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் ஆளுநர் தமிழிசை

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எம்.ஜி.ஆர் நல்ல கனவோடு தொடங்கிய கட்சிதான் அதிமுக. மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவு கொடுத்தார். சிறந்த ஆட்சியாளராக இருந்தார். இன்றைக்கும் அதிமுகவில் அனைவரும் ஒற்றிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆளுநராக சொல்லவில்லை. என் தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன் என்றார்.

 

Tags :

Share via

More stories