அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 3 இடங்களில் நீர்மோர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தளமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வெளிமாவட்டம் வெளி மாநிலம் வெளிநாட்டிலிருந்து விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து பின்னர் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று வார விடுமுறையொட்டி அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் திருமஞ்சனம் கோபுரம் வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்க திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பொது தரிசனம், மற்றும் ஸ்பெஷல் தரிசனம் வழியாக வரிசையில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
Tags : அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 3 இடங்களில் நீர்மோர்.