தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்..தமிழ்நாடு வளர்கிறது என்னும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்ச் அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ரூபாய் 36 660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின .சுமார் 56 ஆயிரத்து 766 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாக இது உள்ளது. இதில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன நிகழ்வில் ஏழை மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும் வழங்கினார். .மதுரை மேலமடை சந்திப்பில் ரூபாய் 150.28 கோடி செலவில் கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் ஏற்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தையும் திறந்து வைத்தார் மொத்தமாக 1.41 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார் முதல்வரின் வருகை காரணமாக மாநகரின் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
|
|
Tags :



















