கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்

கேரள மாநிலம் வயநாடு முண்டக்கை மற்றும் சூழல் மலை அட்டமலை பகுதியில் நேற்று இரவு ஒரு மணி அளவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் கடந்த மூன்று வாரத்திற்கு மேல் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் சூரன் மலை நகரப் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பல வீடுகளும் சேதம் ஆகி பலரை காணவில்லை என்றும் கூறுகின்றனர் தற்பொழுது மீட்பு பணியில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாமல் மீட்புக் குழுவினர் வான்வெளி மூலம் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளை தொடர தகவல் வெளியாகியுள்ளது இதற்காக கோயம்புத்தூர் சூலூர் ராணுவ தளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் வயநாடு சூரன் மலை முண்டக்கை அட்டமலை பகுதிக்கு சென்றுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது பாதிப்படைந்த பலரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் இது கேரளாவில் நடந்த கோர விபத்து என்று கூறுகின்றனர் தற்போது கேரள முதல்வர் அப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
Tags : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்