நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 40பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்.

கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை சூரல்மலை பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மீட்பு பணிக்கு ராணுவம் வரவுள்ளது. விமானப்படையின் ALH மற்றும் Mi7 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன,டெரிடோரியல் ஆர்மி கோழிக்கோடு 122 பட்டாலியனில் இருந்து ஒரு நிறுவனம் விரைவில் வயநாடுக்கு புறப்பட உள்ளது, இதில் 50 குழுக்கள் ஈடுபட உள்ளனர். நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 19 ஆக இருந்த நிலையில் தற்போது 40 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது, சற்று நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்கு வர உள்ளன.1000க்கும் மேற்பட்ட மக்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கேரளாவில் உள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளும் மீட்பு பணி ஈடுபட முதலமைச்சர் உத்தரவு
Tags : நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 30 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்.