மதுரை கப்பலூர் டோல்கேட் விவகாரம் உண்ணாவிரத போராட்டம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றக்கோரி கப்பலூர் டோல்கேட் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று கைது செய்து வருவதால் பரபரப்பு.இவர்களுடன் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருமங்கலம் அருகே உள்ள மேல கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு ஆர் பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார்.
Tags : மதுரை கப்பலூர் டோல்கேட் விவகாரம் உண்ணாவிரத போராட்டம்