கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற தயார். மருத்துவர் கஃபீல் கான் !

by Editor / 24-04-2021 04:32:42pm
கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற தயார். மருத்துவர் கஃபீல் கான் !

2017இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த கஃபீல் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கூறியுள்ள உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இப்போது வரை அவருக்கு அவரது வேலை திரும்ப வழங்கப்படாத நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக கபீல் கான் தெரிவித்துள்ளார்.

Tags :

Share via

More stories

Logo