பாா்சிலோனா ஓபன்: அரையிறுதியில் நடால்

by Editor / 24-07-2021 04:28:23pm
பாா்சிலோனா ஓபன்: அரையிறுதியில் நடால்

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினாா். ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-1, 6-4 என்ற நோ செட்களில் பிரிட்டனின் கேமரூன் நூரியை வீழ்த்தினாா். பாா்சிலோனா ஓபனில் நடால் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜென்னிக் சின்னா் 6-2, 7-6 (6) என்ற நோ செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லேவை வீழ்த்தினாா். இதன்மூலம் பாா்சிலோனா ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் 19 வயதான ஜென்னிக் சின்னா். அரையிறுதியில் உலகின் முன்னணி வீரா்களில் ஒருவரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸை சந்திக்கிறாா் ஜென்னிக் சின்னா்.

பாா்சிலோனா ஓபன்: அரையிறுதியில் நடால்
 

Tags :

Share via

More stories

Logo