செங்கோட்டை நகராட்சி திமுக தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை வாக்கெடுப்பு.
செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ. 3 இடத்திலும், ராமலெட்சுமி, இசக்கி துரை ஆகிய 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் 2-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி அதிமுக ஆதரவோடு நகர்மன்ற தலைவராக இருந்துவந்த நிலையில் நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி தி.மு.க தலைவரும் முதல்வருமான மு..க..ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்..இதன் தொடர்ச்சியாக மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், செங்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அரசின் சாதனை திட்டங்களை கிடப்பில் போட்டதாகவும் அ.தி.மு.க,மற்றும் பா..ஜ..க மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். கூட்ட அரங்கத்தில் மோதலும் நடைபெற்று காவலநிலையம் வரை புகார்கள் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்திலும் உள்ள நிலையில், குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2 கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய நேரம் இல்லாததால் நகர்மன்ற கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது . இந்தநிலையில் அ.தி.மு.க-,பா.ஜ.க-,காங்,-தி.மு.க கவுன்சிலர்கள் 19 பேர் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி செங்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் சுகந்தியிடம் மனு அளித்தனர்.. 24 வார்டுகளை உள்ளடக்கிய செங்கோட்டை நகராட்சியில் 19 வார்டு உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவி ராம லட்சுமி மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மான வாக்கெடுப்பு நாளை 18 ஆம் தேதி காலை 11.30 மணிக்குஅலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
Tags : செங்கோட்டை நகராட்சி திமுக தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை வாக்கெடுப்பு.



















