சிலிண்டர் வெடித்து விபத்து; 7 பேர் படுகாயம்

by Staff / 17-10-2022 01:35:04pm
சிலிண்டர் வெடித்து விபத்து; 7 பேர் படுகாயம்

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் மாணிக்கம் என்பவர் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் அவரது மனைவி ராஜேஸ்வரி அடுப்பு பற்ற வைத்ததாக கூறப்படுகிறது அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் இந்த விபத்தில் வீட்டிலிருந்த 10 நாள் குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via
Logo