கள்ளத்தொடர்பு..கொடூரமாக கொலை செய்த மகள் மனைவி

by Staff / 17-10-2022 01:55:16pm
 கள்ளத்தொடர்பு..கொடூரமாக கொலை செய்த மகள் மனைவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக பசுவந்தனை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீசார் எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் காமநாயக்கன்பட்டி அருகே குருவிநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த ஞானசேகர் (42) என்பதும் இவர் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. குருவிநத்தம் சென்ற பசுவந்தனை போலீசார் ஞானசேகர் வீட்டிற்கு சென்று மனைவி சுலைத்ராணி(38) மற்றும் அவர்களது 15, 14 வயது இரு மகள்களிடம் விசாரித்து போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த கருப்பசாமி என்ற கார்த்திக்(24) என்பவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டனர். சுலைத்ராணியுடன் கார்த்திக்கிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர்  ராணியின் மூத்த மகளுடன் (15) தொடர்பை ஏற்படுத்தி இரண்டு பேர் உடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம் ஞானசேகரனுக்கு தெரியவர கண்டித்துள்ளார். ஞானசேகரன் தூங்கி கொண்டிருக்கும் போது ஞானசேகரின் கண்ணில் மிளகாய் பொடி போட்டு உள்ளனர் அதில் சுதாரித்துக் கொண்டார் ஞானசேகர். ஆனால் கார்த்திக் போர்வையை கொண்டு ஞானசேகர் முகத்தில் மூடி கழுத்தில் கயிறு வைத்து இருக்கியுள்ளார். மூத்த மகள் இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார் மனைவி அறிவாளால் உடலில் வெட்டியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கார்த்திக் காரில் ஏற்றி கொண்டு அச்சங்குளம் அருகே காட்டுப்பகுதியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories