நீட் யுஜி நுழைவுத்தேர்வு -ஆடை கட்டுப்பாடு மாணவிகள் அவதி.
தேசிய அளவில் 22 லட்சம் மாணவர்கள் எழுதும் மருத்துவ படிப்புக்கான 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் யுஜி நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. திருப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த ஒரு மாணவியின் ஆடையில் அதிக எண்ணிக்கையிலான பட்டன்கள் இருப்பதாக கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தவித்த அந்த மாணவியை கடைக்கு அழைத்து சென்று பெண் காவலர் வேறு ஆடை வாங்கி கொடுத்து தேர்வு எழுத உதவினார். இதேபோல ஏராளமான தேர்வுமையங்களில் ஆடை விவகாரம் பெரும் தவிப்பாக மாணவிகளுக்கு இருந்ததாகவும், இவர்கள் கூறும் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப கடைஎன்றும் மாணவர்கள் வேதனையை தெரிவித்தனர்.
Tags : நீட் யுஜி நுழைவுத்தேர்வு -ஆடை கட்டுப்பாடு மாணவிகள் அவதி.



















