அரசுத்துறைகளில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும் - டிடிவி தினகரன்

by Editor / 20-06-2026 02:27:06pm
அரசுத்துறைகளில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும் - டிடிவி தினகரன்

அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்குள் தவெக நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து ரீல்ஸ் வீடியோ எடுக்கும் நிலையை உருவாக்கி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இத்தகைய தேவையற்ற தலையீடுகள் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, மக்கள் பணிகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் அரசியல் தலையீடு இல்லாமல் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via
Logo