7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி பூட்டை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்-சத்யா தம்பதியின் மகள் அதிசயா (7) அண்மையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரணையில் தாய் சத்யா அவரை கிணற்றில் வீசி கொன்றது தெரிந்தது. கைதான அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “சிலரிடம் நான் வாங்கிய ரூ.5 லட்சம் கடனை திருப்பி தரமுடியவில்லை. வீட்டில் துக்க நிகழ்வு நடந்தால் கடன்காரர்கள் பணம் கேட்க மாட்டார்கள் என நினைத்து மகளை கொன்றேன்.” என்றார்.
Tags :