தலை தனியாக, உடல் தனியாக வெட்டி கொலை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் சாலையில் உள்ள பாலத்தில் மனித தலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்று தலையை கைப்பற்றிய போலீசார், கொலையாளி யார், இவரின் உடல் எங்கே என விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் பூவைய்யா என்பதும், அவரை கொலை செய்தது, சக காவலாளியான பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :