தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடிகர் சிவகுமாருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடிகர் சிவகுமாருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கினார். பட்டமளிப்பு உரையில் முதலமைச்சர், சமூக வளர்ச்சிக்கு பொருளாதார உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிக்கும் கலைகள் முக்கியம் என்றும் பட்டம் பெற்ற மாணவர்கள் காலத்தை வெல்லும் படைப்புகளை தந்து தமிழ் சமூகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் ஏ.ஐ புதிய தொழில் நுட்பங்களை கற்றுத் தேடுங்கள் என்றும் அதே வேளை புதிய தொழில் நுட்பம் எந்தாளும் மனித கற்பனையின் விரிவை வென்று விட முடியாது என்பதை உணர்ந்தவர்களாக உங்களது கலைப்பயணம் தொடரட்டும் என்றும் வள்ளுவர் தொடங்கி இசைஞானி வரை கலைகளை கலைஞர்கள் மதித்து போற்றும் நமது அரசு எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் தொிவித்தாா்.
Tags :



















