அரசு பள்ளியில் பயின்று வந்த 11-ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை.

by Editor / 28-02-2025 09:10:56pm
அரசு பள்ளியில் பயின்று வந்த 11-ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகளான மதுநிஹா என்பவர் புளியங்குடி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பியது முதல் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுநிஹா விஷம் அருந்திய நிலையில் , இது குறித்து தெரிந்து கொண்ட அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் மதுநிஹாவை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுநிஹா நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மதுநிஹாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி சென்று வீடு திரும்பிய 11-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags : அரசு பள்ளியில் பயின்று வந்த 11-ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை.

Share via