தொடர் விடுமுறை கட்டுப்பாடற்ற கட்டணங்கள் கண்ணீர் வடிக்கும் பயணிகள்.
சுதந்திரத்தினவிழாவை முன்னிட்டு தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்களை கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து சிறைபிடித்து வரி வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் ஏராளமான தனியார் பேருந்துக்கள் தென்மாவட்ட பயணிகளிடம் கட்டுபாடற்ற கட்டணங்களையே வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
Tags : தொடர் விடுமுறை கட்டுப்பாடற்ற கட்டணங்கள் கண்ணீர் வடிக்கும் பயணிகள்.



















