முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செலுத்திய ரூ.10 லட்சம் கல்வராயன் மலை மக்களுக்கு பயன்படுத்த முடிவு.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்திருந்தது.அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செலுத்திய அபராதத்தொகை ரூ.10 லட்சம் கல்வராயன் மலை மக்களின் சுகாதார நலத்திட்டங்களுக்கும் அங்கு நடைபெறும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று முதல்வரின் முகவரித் துறை அறிவித்துள்ளது.
Tags : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செலுத்திய ரூ.10 லட்சம் கல்வராயன் மலை மக்களுக்கு பயன்படுத்த முடிவு.