முதலமைச்சர் தலைமையில் கூட்டம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில் குழுவின் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, மாணிக்கம் தாகூர், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இதில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :